Showing posts with label bharathiraja. Show all posts
Showing posts with label bharathiraja. Show all posts

Friday, April 23, 2010

ரெட்டை சுழி - மெகா சீரியல் எவ்வளவோ தேவலை!

படம் பார்க்கும் போது எனக்கு ஏற்பட்ட சந்தேகம் இந்த படத்திற்கு எதற்காக இயக்குனர் சிகரத்தையும் இமயத்தையும் நடிக்க வைத்துள்ளனர்? நல்ல Character artist நடிக்க வைத்திருக்கலாமே!! வீனா போச்சு ரூ 430. இவர்கள் மட்டும் போதாது என்று S Pictures வேற. அப்படி என்ன தான் கதை இதுல? சுமார் கி பி 40 வருடங்களாக தோழர் என்கிற நம்ம பாரதிராஜாவுக்கும் ராமசாமி என்கிற பாலச்சந்தருக்கும் பகை. உங்க வீடு பகை இல்ல எங்க வூட்டு பகை இல்ல அப்படி ஒரு பகை. இந்த வீட்டில் ஒரு பயிங்கிலி அந்த வீட்டில் ஒரு பட்டாலத்தானை லவ்ஸ் பண்றாங்க. அட ஆமாங்க சின்ன வயசுலேந்து லவ்ஸ்! அவங்க சேர்வார்களா இல்லையா?

இதுக்காக படத்த பாருங்கன்னு சொல்ல வரல, கண்டிப்பா சேருவாங்க! படத்தில் ஒன்றாவது சொல்ற அளவிற்கு நல்லா இருக்கும்னு பார்த்தா ஒன்னு கூட தேரல! இயக்குனர் தாமிரா ரொம்ப தந்திரமா யோசிச்சு பெரும் புலிகளுடன் சின்ன வாண்டுகளையும் சேத்து நடிக்க வச்சிருக்கார். ஆனால் பசங்களை வச்சி படம் எடுத்தா பாண்டிராஜ் ஆகமுடியாது சார்.

படம் தான் மொக்கைனு பார்த்தா மியூசிக் டாப் டக்கர். ஒரு பாட்டும் மனசுல நிக்கல. இதுல வேற அவங்களே அவங்களை கலாயக்குறாங்க. படத்தோட Editor பாராட்டணம். ஒரு முழு நீல சீரியல் கொடுதிருகாறு. Camera அது இதுனுலாம் போக வேண்டிய அவசியமே இல்லை. படத்தோட கதை எல்லாத்தையும் மறக்கடிக்க வச்சிடுச்சு. பாலச்சந்தருக்கு ஒரு 4 பக்கம் dialogue. பாரதிராஜாவிற்கு என்ன ஒரு 8 பக்கம் இருக்கும். சின்ன சின்ன வாண்டுகளுக்கு சேர்த்து ஒரு 10 பக்கம் அம்புட்டுத்தான்.


நானும் எத்தனையோ படங்கள் பார்த்திருக்கேன், அவ்வளவு ஏன் கோலங்கள் மெகா சீரியல் கூட பார்த்திருக்கேன் சார்! இப்படி ஒரு காவியத்த என் வாழ்நாளில் பார்த்ததில்லை! மிக்க நன்றி தாமிரா அவர்களே! நீர் வாழ்க! சமீபத்தில் ஒரு புதிய விதிமுறை போட்ருக்காங்க loss ஆனா மறுபடியும் அதே producer கூட இன்னுரு படம் பண்ணிதரனம்னு. எப்போ அது இயக்குனர்களுக்கு தகும்னு தெரியல!

Review posted @ www.clapsandboos.com